/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1.15 லட்சம் 'ஆட்டை'
/
ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1.15 லட்சம் 'ஆட்டை'
ADDED : நவ 06, 2025 11:43 PM
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கத்தில், இருசக்கர வாகனத்தில் இருந்த 1.15 லட்சம் ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
அச்சிறுபாக்கத்தில் உள்ள தனியார் நகை அடகு கடையில், சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த மேனகா, 38, என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர், அடகு கடையில் வைக்கப்படும் நகைகளை வங்கியில் வைத்து, நகை உரிமையாளர்கள் மீட்கும் போது, மீண்டும் வங்கியில் இருந்து நகையை கொண்டு வந்து ஒப்படைக்கும் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம், அச்சிறுபாக்கம் பகுதி சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள நகையை மீட்க, 3.15 லட்சம் ரூபாயுடன், ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.
வங்கியின் எதிரே வாகனத்தை நிறுத்தி, நகையை மீட்க 2 லட்சம் ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு,
மீதமுள்ள, 1.15 லட்சம் ரூபாயை, ஸ்கூட்டரின் இருக்கை,'லாக்கரில்' வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், ஸ்கூட்டர் லாக்கரில் இருந்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து நேற்று, அச்சிறுபாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

