/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரி காத்த ராமர் கோவிலில் ரூ.1.70 லட்சம் உண்டியல் காணிக்கை
/
ஏரி காத்த ராமர் கோவிலில் ரூ.1.70 லட்சம் உண்டியல் காணிக்கை
ஏரி காத்த ராமர் கோவிலில் ரூ.1.70 லட்சம் உண்டியல் காணிக்கை
ஏரி காத்த ராமர் கோவிலில் ரூ.1.70 லட்சம் உண்டியல் காணிக்கை
ADDED : அக் 23, 2025 10:38 PM

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலில், உண்டியல் காணிக்கையாக, 1.70 லட்சம் ரூபாய் கிடைத்து உள்ளது.
மதுராந்தகத்தில், புகழ் பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான, ஏரி காத்த ராமர் என அழைக்கப்படும், கோதண்டராமர் திருக்கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், இரண்டு மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது.
இந்நிலையில், 2024 - 25ம் ஆண்டிற்கான கோவில் உண்டியல் காணிக்கை, நேற்று எண்ணப்பட்டது.
ஹிந்து சமய அற நிலையத் துறை கோவில் பொறுப்பு செயல் அலுவலர் மேகவண்ணன் தலைமையில், ஆய்வாளர் வேல்நாயகன் முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டது.
அதில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய, 1.70 லட்சம் ரூபாய் இருந்தது.