/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
80 வயது மூதாட்டியிடம் ரூ.23,000 'அபேஸ்'
/
80 வயது மூதாட்டியிடம் ரூ.23,000 'அபேஸ்'
ADDED : ஜூலை 02, 2025 11:37 AM
சென்னை: கவனத்தை திசை திருப்பி, 80 வயது மூதாட்டியிடம் 23,000 ரூபாய் பறித்த மர்மநபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, பெரம்பூர் பந்தர்கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் யமுனா, 80. இவர், நேற்று முன்தினம் மதியம், மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கிக்கு சென்று, தன் வைப்பு நிதியில் இருந்து 23,000 ரூபாய் எடுத்து, பையில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்மநபர் ஒருவர், மூதாட்டியிடம் சென்று, 'உங்கள் மகன் பையை வாங்கி வருமாறு கூறினார்' எனக்கூறி பையை வாங்கிய மர்மநபர், சட்டென அவரது கவனத்தை திசை திருப்பி, அங்கிருந்து மாயமானார்.
வீட்டுக்கு வந்ததும் மகன் வேலைக்கு சென்று இருப்பது தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து வீட்டுக்கு வந்த மகனிடம் விபரத்தை கூறிய நிலையில், செம்பியம் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை தேடி வருகின்றனர்.