/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் கால்வாய், சிறுபாலம் கட்ட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு
/
மழைநீர் கால்வாய், சிறுபாலம் கட்ட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு
மழைநீர் கால்வாய், சிறுபாலம் கட்ட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு
மழைநீர் கால்வாய், சிறுபாலம் கட்ட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு
ADDED : நவ 23, 2024 01:37 AM
செங்கல்பட்டு,:செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், மழைநீர் கால்வாய், சிறுபாலம் கட்ட,25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
செங்கல்பட்டு நகராட்சியில், சின்னமேலமையூர் பிள்ளையார் கோவில் தெரு, அண்ணா நகர்,அழகேசன் நகர் பகுதியில், மழைநீர் கால்வாய், சிறுபாலம் கட்டித்தர வேண்டும் என, நகரவாசிகள், நகராட்சி நிர்வாகத்திடம்கோரிக்கை மனு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, நகரசபை தலைவர்மற்றும் கமிஷனர், பொறியாளர்கள்ஆகியோர், அவை அமைய வேண்டிய இடங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின், பிள்ளையார் கோவில் தெருவில், மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு, 6 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், அண்ணா நகர் முதல் குறுக்கு தெருவில் சிறுபாலம் மற்றும் மழைநீர் கால்வாய் கட்ட,9.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது.
அழகேசன் நகரில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு, 9.50 லட்சம் ரூபாய் என, மொத்தம் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் செய்ய முடிவுசெய்யப்பட்டது. இப்பணிகளை செயல் படுத்த, நகரசபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.