/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
69 ஊராட்சிகளில் வளர்ச்சி பணி ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு
/
69 ஊராட்சிகளில் வளர்ச்சி பணி ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு
69 ஊராட்சிகளில் வளர்ச்சி பணி ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு
69 ஊராட்சிகளில் வளர்ச்சி பணி ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : ஜூன் 06, 2025 09:09 PM
செங்கல்பட்டு:அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஐந்தாம் கட்டமாக, 69 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு கான்கிரீட் சாலை, அங்கன்வாடி, குளம் மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு, 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம், குன்னப்பட்டு ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை, அப்போதைய முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தில் கான்கிரீட் சாலை, குடிநீர், சுடுகாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று, அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக, 2021 - 22 மற்றும் 2022 --23ல் 144 ஊராட்சிகளில், 63.63 கோடி ரூபாயில் கான்கிரீட் சாலைகள், குடிநீர், சுடுகாடு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், 2023- -24ல், 73 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, 28.94 கோடி ரூபாயில் அங்கன்வாடி மையம், சிமென்ட் கற்கள் சாலை, பள்ளிகளுக்கு கழிப்பறைகள், நீர்நிலைகள் மேம்பாடு, சமுதாய சுடுகாடு ஆகிய பணிகள் செய்து முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
2024- 25 ம் ஆண்டில், 73 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, 28.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கான்கிரீட் சாலை உள்ளிட்ட பணிகள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது, 2025 - 26ம் ஆண்டில், 69 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, 27.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், 252 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி, ஊரக வளர்ச்சித் துறைக்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
அதன் பின், கடந்த ஏப்ரல் மாதம் டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
இதில் ஊராட்சிகளில் கான்கிரீட் சாலை, அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, கற்கள் சாலை, நீராதாரங்கள் மேம்பாடு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.