/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் கடைகள் கட்ட ரூ.43 லட்சம்
/
ரேஷன் கடைகள் கட்ட ரூ.43 லட்சம்
ADDED : டிச 27, 2025 05:48 AM
செங்கல்பட்டு: காட்டாங்கொளத்துார் பகுதியில், புதிதாக மூன்று ரேஷன் கடைகள் கட்ட, 43 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் வெங்கடாபுரம், பட்ரவாக்கம், மறைமலை நகர் நகராட்சியில் எம்.டி.சி., நகர் ஆகிய பகுதிகளில், ரேஷன் கடைக்கு புதிய கட்டம் கட்டித்தர வேண்டும் என, அப்பகுதி மக்கள், குறைதீர்க்கும் கூட்டங்களில் கலெக்டர் சினேகாவிடம் கோரிக்கை மனுக்கள் அளித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து, காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் வெங்கடாபுரம், பட்ரவாக்கம் ஊராட்சிகளில் தலா ஒரு ரேஷன் கடை கட்டடம் கட்ட 14 லட்சம் ரூபாயும், மறைமலை நகர் எம்.டி.சி., நகர் பகுதியில் ரேஷன் கடை கட்ட 15 லட்சம் ரூபாய் என, மொத்தம் 43 லட்சம் ரூபாய் நிதியை, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி ஒதுக்கியுள்ளார்.

