/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு கல்லுாரிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட ரூ.5.10 கோடி ஒதுக்கீடு
/
அரசு கல்லுாரிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட ரூ.5.10 கோடி ஒதுக்கீடு
அரசு கல்லுாரிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட ரூ.5.10 கோடி ஒதுக்கீடு
அரசு கல்லுாரிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட ரூ.5.10 கோடி ஒதுக்கீடு
ADDED : மே 15, 2025 09:18 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரியில், கூடுதலாக 10 வகுப்பறைகள் கட்ட, 5.10 கோடி ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கீடு செய்தது.
செங்கல்பட்டில், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில், செங்கல்பட்டு மட்டுமின்றி, கிராமப்புறங்களைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்கு, வகுப்பறையில் இட நெருக்கடியுடன் மாணவர்கள் படித்து வந்தனர். இதனால், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர், கழிப்பறை கட்டித்தர வேண்டும் என, அரசு மற்றும் கல்லுாரி கல்வி இயக்குனர் ஆகியோருக்கு, கல்லுாரி நிர்வாகம் கருத்துரு அனுப்பியது.
அதன் பின், கல்லுாரி வளாகத்தில் 10 வகுப்பறைகள், குடிநீர், கழிப்பறை ஆகியவை கட்ட, 5.10 கோடி ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கீடு செய்தது.
இப்பணிகளுக்கு, பொதுப்பணித் துறையினர் 'டெண்டர்' விட்டதில், தனியார் ஒப்பந்ததாரர்கள் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, வகுப்பறைகள் கட்டும் பணிக்கான பூமி பூஜையை, முதல்வர் ஸ்டாலின்,'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, வரும் 20ம் தேதி துவக்கி வைப்பதாக, பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.