ADDED : பிப் 20, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழிங்கநல்லுார்,சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, ஈஞ்சம்பாக்கம், பாரதி தெரு, காமராஜர் தெரு, பாடசாலை தெரு, பிராத்தனா அவென்யூ உள்ளிட்ட பகுதியில், குடிநீர் திட்ட பணிகளுக்காக, சாலை துண்டிக்கப்பட்டது.
இதை சீரமைக்க பணம் செலுத்த வேண்டி, மாநகராட்சி மதிப்பீடு தயாரித்தது. இதையடுத்து, 1.15 கோடி ரூபாயை குடிநீர் வாரியம், மாநகராட்சிக்கு செலுத்தியது.
இம்மாதம் இறுதியில், சாலை சீரமைப்பு பணி துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.