/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 25, 2025 11:10 PM

சித்தாமூர், துாய்மைப் பணியாளர்கள் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளதை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர், சித்தாமூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சித்தாமூர் ஒன்றியத்தில் 500க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள், கிராமப்புறங்களில் துாய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
துாய்மைப் பணியாளர்கள், வாரம் ஏழு நாள் வேலை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் ராஜேஷ்கண்ணன் தலைமையில், சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று 3:30 மணியளவில், துாய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலர் கிருஷ்ணசாமி பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன உரை ஆற்றினார்.
இதில் சித்தாமூர், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.