/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு மதுபானக் கடைக்குள் சேல்ஸ்மேன்கள் மீது தாக்குதல்
/
அரசு மதுபானக் கடைக்குள் சேல்ஸ்மேன்கள் மீது தாக்குதல்
அரசு மதுபானக் கடைக்குள் சேல்ஸ்மேன்கள் மீது தாக்குதல்
அரசு மதுபானக் கடைக்குள் சேல்ஸ்மேன்கள் மீது தாக்குதல்
ADDED : ஏப் 25, 2025 10:01 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, கீழவலம் அரசு மதுபானக் கடைக்குள், விற்பனையாளர்கள் இருவரை, உதவி விற்பனையாளர் ஆட்களை வைத்து தாக்கியது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கீழவலம் கிராமத்தில், மதுராந்தகம் -- திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலையோரம், 4473 எண் கொண்ட, அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது.
இங்கு விற்பனையாளராக, பாரதி, 43, என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்த மதுபானக் கடையில் உதவி விற்பனையாளராக பணிபுரியும் வல்லவன் என்பவர், வெளி ஆட்கள் சிலரை வைத்து, கடையில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, உடன் வேலை செய்யும் பாரதி, முரளி ஆகியோர் இதுகுறித்து கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த உதவி விற்பனையாளர் வல்லவன், கீழவலம் பகுதியைச் சேர்ந்த ஆட்கள் சிலரை வரவழைத்து பாரதி, முரளி ஆகியோரை, மதுபானக் கடையின் உள்ளேயே வைத்து தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த இருவரும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
இச்சம்பவத்தால், இரவு நேரத்தில் மது வாங்க வந்த மதுபிரியர்கள் அவதியடைந்தனர்.
இதுகுறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.