/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாம்சங் ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' தொழிற்சாலை நிர்வாகம் விளக்கம்
/
சாம்சங் ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' தொழிற்சாலை நிர்வாகம் விளக்கம்
சாம்சங் ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' தொழிற்சாலை நிர்வாகம் விளக்கம்
சாம்சங் ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' தொழிற்சாலை நிர்வாகம் விளக்கம்
ADDED : பிப் 07, 2025 12:15 AM
ஸ்ரீபெரும்புதுார் :காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில், இயங்கிவரும் சாம்சங் தொழிற்சாலையில், தொழிற்சங்கம் அமைக்க வலியுறுத்தி வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை சிஐடியு நடத்தி வந்தது.
கடந்த ஜன., 25 ம் தேதி, 'சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம்' அங்கிகரிக்கப்பட்டதாக, தமிழக தொழிளாலர் ஆணையம் அறிவித்தது.
நெருக்கடி
இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்களிடம் தொழிற்சாலை நிர்வாகம் சில நெருக்கடிகளை தருவதாக புகார் எழுந்தது.
அதாவது, சங்கத்தில் இருந்து விலகவும், தொழிற்சாலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படும் இண்டர்னல் கமிட்டியில் சேர வேண்டும் என நெருக்கடி கொடுப்பதாக கூறப்பட்டது.
இதனால், அதிருப்திஅடைந்த ஊழியர்கள், ஜன., 31ம் தேதி தொழிலாளர்கள் பலர் ஒன்றினைந்து தொழிற்சாலை நிர்வாக இயக்குனரை சந்திக்க அனுமதி கேட்டனர்.
இதனால், தொழிற்சாலைக்குள் கூட்டத்தை கூட்டி, பதற்றமான சூழலை உருவாக்கியதாக கூறி, நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்த தொழிற்சங்க நிர்வாகிகள் மூன்று பேரை 'சஸ்பென்ட்' செய்து நிர்வாகம் கடிதம் அளித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கடந்த இரு நாட்களாக தொழிற்சாலையின் உள்ளேயும், அலுவலக வாசலிலும் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 'தொழிற்சங்கத்தை விட்டு வெளியேரவும், வேறொரு கமிட்டில் சேரவும் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தவில்லை' என, சாம்சங் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடவடிக்கை
சாம்சங் நிர்வாகம் அறிக்கையில் கூறியதாவது:
பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் நிறுவனத்தின் கொள்கையை மீறியுள்ளனர். மேலும், முறையான விசாரணையை தொடர்ந்து தகுந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
நிறுவனம் எங்கள் தொழிலாளர்களுடன் கூட்டு ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மேலும் எந்தவொரு ஊழியரையும் தொழிலாளர் குழுவில் சேரவோ அல்லது தொழிற்சங்கத்தை விட்டு வெளியேறவோ கட்டாயப்படுத்தவில்லை.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.