தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மணல் லாரிகள் சிறைபிடிப்பு

 மணல் லாரிகள் சிறைபிடிப்பு

 மணல் லாரிகள் சிறைபிடிப்பு


ADDED : மார் 19, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 05:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு: ஒழலுாரில் மணல் ஏற்றிச்சென்ற லாரிகளை அப்பகுதி மக்கள் வழிமறித்து, சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு அடுத்த, மணப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் தனியார் மண் குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து, 100க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் அதிகமாக மணல் ஏற்றிச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மணப்பாக்கம் பகுதியில் இருந்து வரும் லாரிகள் ஒழலுார் வழியாக, செங்கல்பட்டு செல்கிறது.

இதனால், சாலையில் செல்லும், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர்.

இதனால், ஒழலுாரைச் சேர்ந்த பகுதி மக்கள் மணல் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரிகளை மறித்து, நேற்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில், மக்களிடம் பேச்சு நடத்தி, சமாதானம் செய்தார்.

அப்போது, தனியார் மண் குவாரி நடத்தும் உரிமையாளர், ஒழலுார் பகுதியில், கோவில் கட்ட, 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதில், 6 லட்சம் ரூபாய், மேற்கண்ட ஊரில் முக்கிய பிரமுகரிடம், கொடுக்கப்பட்டதாக, குவாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மீதி பணம் தருவதாக உறுதி அளித்த பின், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us