/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிதாக அமையவுள்ள 2 கல்குவாரிகள் சரவம்பாக்கம் கிராமத்தினர் எதிர்ப்பு
/
புதிதாக அமையவுள்ள 2 கல்குவாரிகள் சரவம்பாக்கம் கிராமத்தினர் எதிர்ப்பு
புதிதாக அமையவுள்ள 2 கல்குவாரிகள் சரவம்பாக்கம் கிராமத்தினர் எதிர்ப்பு
புதிதாக அமையவுள்ள 2 கல்குவாரிகள் சரவம்பாக்கம் கிராமத்தினர் எதிர்ப்பு
ADDED : ஏப் 23, 2025 07:53 PM
சித்தாமூர்:சரவம்பாக்கம் ஊராட்சியில், ஏற்கனவே நான்கு குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிதாக மேலும் இரண்டு கல் குவாரிகள் அமைய உள்ளதால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சித்தாமூர் அடுத்த சரவம்பாக்கம் ஊராட்சியில் கொளத்துார், கோட்டிவாக்கம், சரவம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இதில், 1,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். விவசாயமே, இந்த கிராம மக்களின் பிரதான தொழில்.
சரவம்பாக்கம் ஊராட்சியில் ஏற்கனவே, நான்கு கல்குவாரிகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இந்த கல்குவாரிகளால் நீர்மட்டம் குறைந்து, விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும், பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடிகளால், விவசாயக் கிணறுகள் மற்றும் வீடுகள் சேதமடைந்து, கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே செயல்படும் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என, கிராம மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது சரவம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டிவாக்கம் கிராமத்தில், 6.82 ஏக்கர் மற்றும் கொளத்துார் கிராமத்தில் 8.20 ஏக்கர் பரப்பளவில், இரண்டு கல்குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கக்கோரி, செங்கல்பட்டு மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே உள்ள கல்குவாரிகளால், சரவம்பாக்கம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், புதிதாக துவக்கப்பட உள்ள இரண்டு கல்குவாரிக்கு அனுமதி வழங்க, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.