/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்தசுவாமி கோவிலில் சஷ்டி வழிபாடு விமரிசை
/
கந்தசுவாமி கோவிலில் சஷ்டி வழிபாடு விமரிசை
ADDED : ஏப் 04, 2025 01:42 AM

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சஷ்டியை முன்னிட்டு நேற்று, பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில், புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது.
நேற்று ஏப்., மாதத்தின் முதல் வளர்பிறை சஷ்டி வந்ததால், இக்கோவிலில் காலை முதலே, பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மொட்டை அடித்தல் போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர். மேலும், அகல் விளக்கேற்றியும், முருகனுக்குரிய மந்திரங்கள் சொல்லியும், பக்தர்கள் வழிபட்டனர்.
இதேபோல் நெல்லிக்குப்பம், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும், சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்தன.
இதில், அந்தந்த பகுதி பக்தர்கள் பங்கேற்று, கந்த சஷ்டி கவசம் பாடி வழிபாடு செய்தனர்.