/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளி அளவில் கால்பந்து எம்.சி.சி., அணி வெற்றி
/
பள்ளி அளவில் கால்பந்து எம்.சி.சி., அணி வெற்றி
ADDED : ஜன 27, 2025 11:14 PM

சென்னை, சென்னையின் எப்.சி., - இங்கிலாந்து நார்விச் சிட்டி எப்.சி., கிளப்புகள் இணைந்து, பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை, சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி மைதானத்தில் நடத்தின.
இதில், யு - 12, யு - 14 பிரிவினருக்கு மட்டும் போட்டிகள் நடக்கின்றன. 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் நடக்கும் இப்போட்டியில், இருபிரிவிலும் தலா, 32 அணிகள் என, மொத்தம், 64 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று காலை நடந்த, 12 வயது பிரிவு போட்டியில், எம்.சி.சி., பள்ளி மற்றும் சவீதா பள்ளிகள் மோதின. அதில், 2 - 1 என்ற கோல் கணக்கில், எம்.சி.சி., பள்ளி அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி, 2 - 0 என்ற கணக்கில், கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி அணியை தோற்கடித்தது.
அதேபோல், 14 வயதுக்கு உட்பட்ட போட்டியில், சவீதா ஈகோ பள்ளி அணி, 3 - 0 என்ற கணக்கில், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியையும், பவன்ஸ் ராஜாஜி பள்ளி, 4 - 0 என்ற கோல் கணக்கில், டி.ஏ.வி., பள்ளியையும் வீழ்த்தி வெற்றி பெற்றன. போட்டிகள் தொடர்கின்றன.