/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புலிப்பாக்கத்தில் லாரி மோதி பள்ளி சுற்றுச்சுவர் சேதம்
/
புலிப்பாக்கத்தில் லாரி மோதி பள்ளி சுற்றுச்சுவர் சேதம்
புலிப்பாக்கத்தில் லாரி மோதி பள்ளி சுற்றுச்சுவர் சேதம்
புலிப்பாக்கத்தில் லாரி மோதி பள்ளி சுற்றுச்சுவர் சேதம்
ADDED : செப் 02, 2025 01:02 AM

மறைமலை நகர், புலிப்பாக்கத்தில், தறிகெட்டு ஓடிய டிப்பர் லாரி மோதி, அரசு துவக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர், இரு 'பைக்'குகள் சேதமடைந்தன.
செங்கல்பட்டில் இருந்து புலிப்பாக்கம் நோக்கி, நேற்று முன்தினம் மாலை, டிப்பர் லாரி ஒன்று வந்தது.
புலிப்பாக்கம் மேட்டுத் தெருவில் வந்த போது, லாரியின் 'பிரேக்' பழுதடைந்துள்ளது. இதனால், மேடான பகுதியில் இருந்து தாழ்வான பகுதியை நோக்கி லாரி வேகமாக சென்றதால், 'லாரி பிரேக் பிடிக்கவில்லை' என கூச்சலிட்டபடியே, ஓட்டுநர் லாரியை நிறுத்த முயற்சித்துள்ளார்.
அப்போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பைக்குகள் மீது லாரி ஏறி இறங்கி, அருகில் இருந்த அரசு துவக்கப்பள்ளி சுற்றுச்சுவரில் மோதி நின்றது. இதில், இரு பைக்குகளும், பள்ளி சுற்றுச்சுவரும் சேதமடைந்தன.
லாரி ஓட்டுநர், அங்கிருந்து தப்பி ஓடினார். அப்பகுதியில் மக்கள் நடமாடும் குறைவாக இருந்ததால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.