ADDED : மே 22, 2026 04:22 AM
அ நிறம் | அளவு
திருப்போரூர்: கண்டிகை அடுத்த நல்லம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், 16. 10ம் வகுப்பு படித்து வந்த சிறுவன், பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இதனால், அவரது தந்தை நேற்று முன்தினம் சிறுவனை கண்டித்துள்ளார்.
இதனால், மனமுடைந்த சிறுவன் தன் பெரியப்பா வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அங்கிருந்தோர் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாழம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
