ADDED : பிப் 01, 2026 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அருகே, பள்ளி மாணவன் மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
திருக்கழுக்குன்றம் அடுத் த ஆனுாரைச் சேர் ந்த கோபிநாதன் என்பவரது மகன் பிரசாத், 14. பொன்விளைந்தகளத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூ றப்படும் இவர், அவ்வப்போது காணாமல் போவார் எனக் கூறப்படுகிறது. கடந்த ஜன., 1ம் தேதி காணாமல் போய், திருக்கழுக்குன்றம் போலீசார் கண்டுபிடித்து, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மீண்டும் ஜன., 28ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசில், அவரது தந்தை கோபிநாதன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, மாணவனை தேடி வருகின்றனர்.

