/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல் குவாரியில் மூழ்கிய வாலிபர் இரண்டாவது நாளாக தேடும் பணி
/
கல் குவாரியில் மூழ்கிய வாலிபர் இரண்டாவது நாளாக தேடும் பணி
கல் குவாரியில் மூழ்கிய வாலிபர் இரண்டாவது நாளாக தேடும் பணி
கல் குவாரியில் மூழ்கிய வாலிபர் இரண்டாவது நாளாக தேடும் பணி
ADDED : மார் 25, 2025 07:49 AM
குன்றத்துார் : சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், 28. இவர், குன்றத்துாரில் நண்பர்களுடன் தங்கி, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பாலமுருகன் தன் நண்பர்களுடன், குன்றத்துார் அருகே எருமையூரில் உள்ள கல்குவாரியில் குளிக்க சென்றார். அப்போது நீரில் மூழ்கி மாயமானார். சோமங்கலம் போலீசார் மற்றும் படப்பை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, சென்னை மெரினா மீட்பு குழுவைச் சேர்ந்த ஆறு வீரர்கள் வரவைக்கப்பட்டனர். இந்த குழு ஆக்சிஜன் சிலிண்டர் உடன் குவாரியில் மூழ்கி நேற்று தேடியும் கிடைக்கவில்லை. மூன்றாவது நாளாக இன்றும் தேடுதல் பணியில் ஈடுபட உள்ளனர்.