/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பல்கலை மாணவியை சீண்டிய காவலாளி கைது
/
பல்கலை மாணவியை சீண்டிய காவலாளி கைது
ADDED : ஜூலை 27, 2025 08:54 PM
மறைமலை நகர்:மாணவியிடம் சீண்டலில் ஈடுபட்ட, தனியார் நிறுவன காவலாளியை, போலீசார் கைது செய்தனர்.
மறைமலை நகர் அடுத்த பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் பல்கலையில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இவர், பொத்தேரி பகுதியில் நடந்து சென்ற போது, மர்ம நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு விட்டு, தப்பிச் சென்றார்.
இதுகுறித்து இளம்பெண், மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது, பம்மல் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம், 40, என தெரிந்தது.
மேலும், காட்டாங்கொளத்துார் பகுதியில் தங்கியிருந்த இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து, ஸ்ரீராமை கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.