/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயன்பாட்டிற்கு திறக்கப்படாத விதை சுத்திகரிப்பு நிலையம்...கிடப்பில்: இயந்திரம் பொருத்தாமல் தாமதிப்பதால் விவசாயிகள் அவதி
/
பயன்பாட்டிற்கு திறக்கப்படாத விதை சுத்திகரிப்பு நிலையம்...கிடப்பில்: இயந்திரம் பொருத்தாமல் தாமதிப்பதால் விவசாயிகள் அவதி
பயன்பாட்டிற்கு திறக்கப்படாத விதை சுத்திகரிப்பு நிலையம்...கிடப்பில்: இயந்திரம் பொருத்தாமல் தாமதிப்பதால் விவசாயிகள் அவதி
பயன்பாட்டிற்கு திறக்கப்படாத விதை சுத்திகரிப்பு நிலையம்...கிடப்பில்: இயந்திரம் பொருத்தாமல் தாமதிப்பதால் விவசாயிகள் அவதி
ADDED : நவ 03, 2025 01:22 AM

செங்கல்பட்டு:தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டையில் துவக்கப்பட்ட மாவட்ட விதை சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகள் முடிந்தும், ஓராண்டாக திறக்கப்படாமல் கிடப்பில் உள்ளதால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.
புது நிலையம் மாவட்டத்தில் சம்பா, சொர்ணவாரி, நவரை ஆகிய பட்டங்களில் ஏரி, கிணறு, ஆழ்துளை கிணறுகள் மூலமாக, விவசாய நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில், விதை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
இந்த நிலையத்தில் திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், சிட்லப்பாக்கம் வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் விதை சுத்திகரிப்பு செய்கின்றனர்.
மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், பவுஞ்சூர் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள், விதைகளை சுத்திகரிப்பு செய்கின்றனர்.
இந்நிலையங்களில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்கப்பட்டன. இந்த இயந்திரங்கள் மூலமாக, ஒரு மணி நேரத்திற்கு, 500 கிலோ நெல் விதையை மட்டுமே சுத்திகரிப்பு செய்ய முடியும். புதிய விதை சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால், ஒரு மணி நேரத்திற்கு, 2,000 கிலோ விதையை சுத்திகரிப்பு செய்ய முடியும்.
கோரிக்கை இதனால், விதைகளை உடனுக்குடன் சுத்திகரிப்பு செய்ய முடியாத சூழல் உள்ளதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிதாக விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் நலன்காக்கும் கூட்டங்களில், கலெக்டர் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர்.
இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கும், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் 2023 - 24ல், 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, இப்பணிகளுக்கு வேளாண்மை விற்பனை மற்றும் வணிக வரித்துறை சார்பில்,'டெண்டர்' விடப்பட்டது .
இப்பணியை, தனியார் ஒப்பந்ததாரர் எடுத்தார்.
அதன் பின், மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டையில், வேளாண் மைத் துறைக்குச் சொந்தமான இடத்தில், கடந்த ஆண்டு, மாவட்ட விதை சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி துவங்கியது.
ஓராண்டுகளில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது அங்கு விதை சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்கப்படாததால், சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதில் சிக்கல் நீடிக்கிறது.
பாதிப்பு விவசாயிகள் பயன் பெறுவதற்காக கொண்டுவரப்பட்ட இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விவசாயிகள் விதைகளை சுத்திகரிப்பு செய்ய முடியாமல், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே, விவசாயிகள் நலன் கருதி, இயந்திரங்கள் அமைத்து, மாவட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர, கலெக்டர் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

