/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திறந்தவெளியில் கழிவுநீர் கொட்டிய லாரி பறிமுதல்
/
திறந்தவெளியில் கழிவுநீர் கொட்டிய லாரி பறிமுதல்
ADDED : அக் 06, 2024 01:05 AM
திருப்போரூர், திருப்போரூர் அடுத்த தாழம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளன. இங்கிருந்து கழிவுநீர் லாரிகள் வாயிலாக எடுக்கப்படும் கழிவுநீரை பொது இடங்களில் கொட்டுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, தாம்பரம் காவல் ஆணையரகம் உத்தரவின்படி, தாழம்பூர் போலீசார் இப்பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவ்வப்போதும் கழிவுநீர் விடுவோரை எச்சரித்தும் வந்தனர்.
இந்த நிலையில், எச்சரிப்பை மீறி மீண்டும் பொதுவெளியில் கழிவுநீரை திறந்து விடுவது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அதே பகுதியை சேர்ந்த ஓட்டுனர் அஜய், 20, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, கழிவுநீர் லாரியை பறிமுதல் செய்தனர்.