/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் குழாய் அமைக்க செங்கை நகராட்சி அனுமதி
/
குடிநீர் குழாய் அமைக்க செங்கை நகராட்சி அனுமதி
ADDED : ஜன 18, 2024 01:46 AM
செங்கல்பட்டு:தட்டான்மலை பகுதியில், குடிநீர் பிரதான குழாய் அமைக்க, நகராட்சி அனுமதி அளித்துள்ளது.
செங்கல்பட்டு நகராட்சியில், தட்டான்மலை பகுதியில், புதிதாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 1 கோடி ரூபாய் மதிப்பில், பணிகள் துவங்கி நிறைவு பெற்றன.
தற்போது குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில், குடிநீர் பிரதான குழாய் மட்டுமே அமைப்பதற்கு, மட்டும் இடம் பெற்றுள்ளது.
இதனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, வார்டு எண்கள்; 5, 8, 9, 10 ஆகிய வார்டுகளில், அமைந்துள்ள தெருக்களுக்கு, குடிநீர் பிரதான குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான மதிப்பீட்டு தொகை, 10 லட்சம் ரூபாய் தயார் செய்து, நகராட்சி கூட்டத்தில், அனுமதிக்கு வைக்கப்பட்டது. இப்பணிகள் செயல்படுத்த, நகராட்சி அனுமதி அளித்து, தீர்மானம் நிறைவேற்றியது.