/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கேணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
செங்கேணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜூன் 09, 2025 02:41 AM

சிங்கபெருமாள் கோவில்:செங்கல்பட்டு அடுத்த கொளவா அம்மணம்பாக்கம் கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமையான, கிராம தேவதையான செங்கேணியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலை விக்னேஷ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
பின், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் வேத மந்திரங்கள் முழங்க, கோவில் விமானம் மற்றும் கலசங்கள் மீது ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
இதில், அம்மணம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
* திருப்போரூர்
திருப்போரூர் பேரூராட்சி, 15வது வார்டில் பழமை வாய்ந்த படவட்டம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் புனரமைக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு, நான்காம் யாக சாலை பூஜையுடன் கோபுர கலச புனித நீர் புறப்பாடு நடத்தப்பட்டு, படவட்டம்மன் கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மஹா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தன.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.