/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை கோ - ஆப்டெக்ஸ்சில் தீபாவளி விற்பனை துவக்கம்
/
செங்கை கோ - ஆப்டெக்ஸ்சில் தீபாவளி விற்பனை துவக்கம்
செங்கை கோ - ஆப்டெக்ஸ்சில் தீபாவளி விற்பனை துவக்கம்
செங்கை கோ - ஆப்டெக்ஸ்சில் தீபாவளி விற்பனை துவக்கம்
ADDED : அக் 04, 2024 01:32 AM

செங்கல்பட்டு:தமிழக அரசின் கூட்டுறவு நிறுவமனமான கோ -- ஆப்டெக்ஸ், கடந்த 89 ஆண்டுகளாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து, இந்தியா முழுதும் சந்தைப்படுத்தி வருகிறது.
கோ- - ஆப்டெக்ஸ் நிறுவனம், பாரம்பரியமிக்க பட்டு கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்துார், ஆரணி, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பட்டுச்சேலைகளை கொள்முதல் செய்து, விற்பனை செய்து வருகிறது.
இளம் தலைமுறையினர் விரும்பும், காலத்திற்கேற்ப புதிய வடிவமைப்புள்ள மென்பட்டு சேலைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது.
தீபாவளி பண்டிகைக்காக, பட்டு பருத்தி ரகங்கள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், மகளிர் விரும்பும் சுடிதார் இரகங்கள், ஆர்கானிக் பருத்தி ரகங்கள் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகை கால விற்பனையாக, கடந்த 15ம் தேதியிலிருந்து துவங்கி, வரும் நவ., 30ம் தேதி வரை, 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
செங்கல்பட்டு கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று துவக்கி வைத்தார். சென்னை முதுநிலை மண்டல மேலாளர் அருள்ராஜன், தாசில்தார் பூங்குழலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேற்கண்ட நிலையத்திற்கு, ஒரு கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மக்கள், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட, துணிகளை கொள்முதல் செய்ய வேண்டுகோள் விடுத்தனர்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வசதிக்காக, நேரிடையாக சென்று, வளாக விற்பனையும் செய்து வருகின்றனர்.
சேமிப்பு திட்டத்தின் வாயிலாக, வாடிக்கையாளர்கள் 11 மாத சந்தா தொகையை மட்டும் செலுத்தி, 12வது மாத சந்தா தொகையை கோ - ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்துவதால், வாடிக்கையாளர்கள் 30 சதவீதம் தள்ளுபடியை ஆண்டு முழுதும் பெறலாம் என, மண்டல மேலாளர் தெரிவித்தார்.