தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சர்வர் பிரச்னையால் தவிக்கும் பணியாளர்கள் :நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள் அவதி

சர்வர் பிரச்னையால் தவிக்கும் பணியாளர்கள் :நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள் அவதி

சர்வர் பிரச்னையால் தவிக்கும் பணியாளர்கள் :நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள் அவதி


UPDATED : ஆக 19, 2026 04:04 PM

ADDED : ஆக 19, 2026 03:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2026 04:04 PM ADDED : ஆக 19, 2026 03:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செய்யூர்:செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்னையால், பொருட்கள் வாங்க நீண்ட நேரம் காத்திருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

செய்யூர் தாலுகாவில் மொத்தம் 176 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் வாயிலாக அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

குறிப்பாக குடும்ப அட்டையை ஸ்கேன் செய்து, பயோ மெட்ரிக் இயந்திரம் வாயிலாக விரல் ரேகை பதிவு செய்யப்பட்ட பின் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

ஆனால், 20 நாட்களுக்கும் மேலாக பயோ மெட்ரிக் இயந்திரம் சர்வர் பிரச்னையால் வேகமாக பதிவு செய்ய முடியாமல் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.

மேலும், மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பொருட்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து ரேஷன் கடை பணியாளர்கள் கூறியதாவது:

பயோ மெட்ரிக் இயந்திரத்தின் சர்வர் வேகமாக இருந்தால், நாள் ஒன்றுக்கு 70 முதல் 100 அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கலாம். கடந்த 20 நாட்களாக சர்வர் பிரச்னையால் பயோ மெட்ரிக் இயந்திரம் செ யல்படாமல் முடங்கியுள்ளது. இதனால், 15 முதல் 20 அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்க முடிகிறது. செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த சர்வர் பிரச்னை நீடித்து வருகிறது.

குறிப்பாக ஒரு சில பகுதிகளில் பணியாளர் ஒருவர் இரண்டு ரேஷன் கடைகளை கவனிக்க வேண்டி இருப்பதால், பணிச்சுமையும் அதிகரித்து பொருட்கள் வினியோகிப்பதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொறுமை இழக்கும் மக்கள் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். எனவே, அரசு கவனம் செ லுத்தி சர்வர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us