/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்குன்றம் சாலையில் ஆக்கிரமிப்பால் கடும் அவதி
/
செங்குன்றம் சாலையில் ஆக்கிரமிப்பால் கடும் அவதி
ADDED : ஜூலை 16, 2025 01:11 AM

மறைமலை நகர்:செங்குன்றம் சாலையை ஆக்கிரமித்து ஜல்லி, செங்கற்கள் கொட்டப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிங்கபெருமாள் கோவில் -- செங்குன்றம் சாலை 5 கி.மீ., துாரம் உடையது.
இந்த சாலையை ஒட்டி செங்குன்றம், இந்திரா நகர், அலமேலுமங்காபுரம், நரசிங்கபுரம் காலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், 4,000க்கும் மேற்பட்ட வீடுகள், இரண்டு தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை உள்ளன. நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.
மேலும் இந்த சாலை, மெல்ரோசாபுரம் -- மருதேரி சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது. இந்த சாலைஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஜல்லி கற்கள், செங்கற்கள் கொட்டப்பட்டு உள்ளன.
இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி வாகனம், தொழிற்சாலை பேருந்துகள், வளைவுகளில் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டு, காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், கட்டடக்கழிவு பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டு உள்ளதால் மண் துகள்கள் காற்றில் பறந்து, வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.