/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடியிருப்புகளை சுற்றி தேங்கும் கழிவுநீர் காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் அவலம்
/
குடியிருப்புகளை சுற்றி தேங்கும் கழிவுநீர் காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் அவலம்
குடியிருப்புகளை சுற்றி தேங்கும் கழிவுநீர் காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் அவலம்
குடியிருப்புகளை சுற்றி தேங்கும் கழிவுநீர் காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் அவலம்
ADDED : டிச 20, 2025 05:37 AM

மறைமலை நகர்: காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால், பல்வேறு பகுதிகளில் வீடுகளை சுற்றியும், சாலையிலும் கழிவுநீர் தேங்கி, தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில், புறநகரில் உள்ள காட்டாங்கொளத்துார் ஒன்றியம், 193 சதுர கி.மீ., பரப்பளவி ல் உள்ளது.
துர்நாற்றம் கடந்த 2011 மக்கள் தொகை க ணக்கெடுப்பின்படி, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில், வளர்ந்து வரும் ஊராட்சிகளான சிங்கபெருமாள் கோவில், வண்டலுார், ஊரப்பாக்கம், நெடுங்குன்றம், வீராபுரம் உள்ளிட்ட பகுதிகளில், அதிக அளவில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் அதிகரித்து வருகின்றன.
இதன் அடிப்படையில், 12 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள 39 ஊராட்சிகளில் 6,000க்கும் மேற்பட்ட பெரிய தெருக்கள் மற்றும் 15,000க்கும் மேற்பட்ட உட்புற தெருக்களின் ஓரங்களில், மழைநீர் வடிகால்வாய் மற்றும் வரத்து கால்வாய்கள் உள்ளன.
இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக, மழைநீர் கால்வாய்களில் விடப்பட்டு வருவதால், பல்வேறு பகுதிகளில் கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, காட்டாங் கொளத்துார் ஒன்றியத்தில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சென்னை மாநகரின் புறநகர் பகுதியான காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வளந்து வரும் பகுதியாக உள்ளது. அதற்கேற்றபடி அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.
நடவடிக்கை குறிப்பாக, கழிவு நீர் மேலாண்மை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால், கால்வாயில் மண் நிரம்பி உள்ளது.
இணைப்புகளும் முறையாக இல்லாத நிலையில், கால்வாயில் பிளாஸ்டிக் குப்பை நிறைந்து, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்ட முக்கிய சாலையை ஒட்டியுள்ள பகுதி களில், கழிவுநீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. இதனால், பொதுமக்கள் மூக்கை பொத்தியபடி செல்கின்றனர்.
நோய் தொற்று ஏற்பட, இது முக்கிய காரணமாக உள்ளது. எனவே,மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊராட்சிகளில் கட்டடங்கள் கட்டும் போது, கழிவுநீருக்கென 'செப்டிக் டேங்க்' அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த பின்னரே, கட்டடம் முழுமையடைந்த சான்று வழங்க வேண்டும். ஆனால் பெரும்பாலான ஊராட்சிகளில், இந்த நடைமுறையை பின்பற்றுவது இல்லை. அதிகாரிகளும் ஆய்வு செய்து, விதிமீறுவோருக்கு அபராதம் விதிப்பது இல்லை. இதன் காரணமாகவே, கழிவுநீர் பிரச்னை தீராத பிரச்னையாக உள்ளது. - எம்.மணிகண்டன், சிங்கபெருமாள் கோவில்.

