/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் சோத்துப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு

ADDED : அக் 26, 2025 10:18 PM

மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கம் புறவழிச் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
சோத்துப்பாக்கம் பகுதியில், சென்னை -- திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
இங்கு, புறவழிச் சாலை யோரம், தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.
சோத்துப்பாக்கம் பகுதி கடைகளில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட குப்பை கழிவுகளால், இந்த கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், கழிவுநீர் கால்வாயில் செல்லாமல், சாலையில் வழிந்து தேங்கி நிற்கிறது.
இதன் காரணமாக, புறவழிச் சாலையை பயன்படுத்தும் மக்கள், கழிவுநீர் துர்நாற்றத்தால் சிரமப்படுகின்றனர்.
மேலும், தேங்கியுள்ள கழிவுநீரால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே, கழிவுநீர் விரைந்து வெளியேறும் வகையில், புறவழிச்சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் உள்ள அடைப்புகளை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.