/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஹோட்டல்களின் கழிவுநீர் ஜி.எஸ்.டி., சாலையில் தேங்கி 'கப்'
/
ஹோட்டல்களின் கழிவுநீர் ஜி.எஸ்.டி., சாலையில் தேங்கி 'கப்'
ஹோட்டல்களின் கழிவுநீர் ஜி.எஸ்.டி., சாலையில் தேங்கி 'கப்'
ஹோட்டல்களின் கழிவுநீர் ஜி.எஸ்.டி., சாலையில் தேங்கி 'கப்'
ADDED : அக் 29, 2025 10:51 PM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில் தேங்கும் கழிவுநீரால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு ஜி.எஸ்.டி., சாலையில், சென்னை நோக்கிச் செல்லும் மார்க்கத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியின் நுழைவாயில் அருகே கழிவுநீர் அதிக அளவில் தேங்குவதால், அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களும், துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். மேலும், கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதியில் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., சாலையை எட்டு வழிச் சாலையாக அகலப்படுத்தும் போது, பழைய கழிவுநீர் கால்வாய் அகற்றப்பட்டது.
அதன் பின், புதிதாக கழிவுநீர் கால்வாய் மற்ற பகுதிகளில் கட்டப்பட்டது. ஆனால், இந்த பகுதியில் இதுவரை கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை.
இதன் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக இந்த பகுதியில் உள்ள வணிக கட்ட டங்கள், ஹோட்டல், 'பேக்கரி'களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் தேங்குகிறது. அதில் பிளாஸ்டிக் குப்பையும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இந்த கழிவுநீரை அகற்ற, உள்ளாட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

