/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தெருவில் வழிந்தோடும் கழிவுநீர் மறைமலை நகரில் மக்கள் அவதி
/
தெருவில் வழிந்தோடும் கழிவுநீர் மறைமலை நகரில் மக்கள் அவதி
தெருவில் வழிந்தோடும் கழிவுநீர் மறைமலை நகரில் மக்கள் அவதி
தெருவில் வழிந்தோடும் கழிவுநீர் மறைமலை நகரில் மக்கள் அவதி
ADDED : பிப் 16, 2024 12:22 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, காந்தி சாலை இரண்டாவது குறுக்கு தெருவில், தனியார் பள்ளிகள், வீடுகள் மற்றும் திருமண மண்டபம், ஹோட்டல்கள் உள்ளன.
இந்த சாலையில் இருந்து காந்தி சாலை இரண்டாவது தெரு சந்திப்பில், மழைநீர் வடிகால்வாய் உள்ளது. இந்த கால்வாயில், சுற்றியுள்ள கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பை நிறைந்து உள்ளது.
அதனால், கழிவுநீர் வெளியேற முடியாமல், சாலை மற்றும் நடைபாதைகளில் வழிந்து ஆறாக ஓடுகிறது. இதன் காரணமாக, அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், கடந்து செல்வோர் மூக்கை பொத்தியபடி செல்கின்றனர்.
அருகிலேயே பள்ளி உள்ளதால், குழந்தைகள், பெற்றோர்கள் என, அனைவரும் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து, பாதசாரிகள் கூறியதாவது:
இந்த பகுதியில் கழிவுநீர் பல மாதங்களாக வழிந்து ஓடுகிறது. அதில், வாகனங்கள் செல்லும் போது, கழிவுநீர் பாதசாரிகள் மீதும் குழந்தைகள் மீதும் படுகின்றன.
எனவே, கழிவுநீர் கால்வாயை துார்வாரி அதில் உள்ள குப்பையை அகற்ற, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.