/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர்- - தண்ணீர்பந்தல் சாலையில் மின்விளக்கு வசதியின்றி அவதி
/
செய்யூர்- - தண்ணீர்பந்தல் சாலையில் மின்விளக்கு வசதியின்றி அவதி
செய்யூர்- - தண்ணீர்பந்தல் சாலையில் மின்விளக்கு வசதியின்றி அவதி
செய்யூர்- - தண்ணீர்பந்தல் சாலையில் மின்விளக்கு வசதியின்றி அவதி
ADDED : ஜன 20, 2025 01:42 AM

செய்யூர்:செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட தேவராஜபுரத்தில் இருந்து தண்ணீர்பந்தல் கிராமத்திற்குச் செல்லும் தார் சாலை உள்ளது.
இந்த சாலையை தண்ணீர்பந்தல், பாளையூர், சித்தார்காடு, அமந்தங்கரணை என, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த சாலையில் பல ஆண்டுகளாக மின் விளக்கு வசதி இல்லை. இதனால், இரவு நேரத்தில் சாலையில் விஷ பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் சாலையில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.