/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை துவக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்தாண்டை விட குறைந்ததால் அதிர்ச்சி

UPDATED : ஆக 09, 2025 11:13 AM
ADDED : ஆக 09, 2025 01:27 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு துவக்கப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் கடந்தாண்டு, 7,227 மாணவர்கள் சேர்ந்த நிலையில், இந்தாண்டு, 6,073 மாணவர்கள் மட்டும் சேர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் துவக்கப் பள்ளிகள் 481, அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளிகள் 83, நடுநிலைப் பள்ளிகள் 189, அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகள் 27 என, மொத்தம் 782 பள்ளிகள் உள்ளன.
அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், சிட்லப்பாக்கம் ஆகிய கல்வி வட்டாரங்கள் உள்ளன.
இந்த வட்டாரங்களில் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில், பள்ளிக்கல்வித்துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. அதன்படி இந்தாண்டும், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்தாண்டு, ஒன்றாம் வகுப்பில், 7,227 மாணவர்கள் சேர்ந்தனர்.
ஆனால் இந்தாண்டு, எட்டு வட்டாரங்களில் துவக்கப் பள்ளியில், மார்ச் மாதத்தில் இருந்து, கடந்த 6ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெற்றதில், ஒன்றாம் வகுப்பில், 6,073 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.