/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெற்களம் மீது நாடக மேடை மதுராந்தகம் அருகே அதிர்ச்சி
/
நெற்களம் மீது நாடக மேடை மதுராந்தகம் அருகே அதிர்ச்சி
நெற்களம் மீது நாடக மேடை மதுராந்தகம் அருகே அதிர்ச்சி
நெற்களம் மீது நாடக மேடை மதுராந்தகம் அருகே அதிர்ச்சி
ADDED : ஏப் 14, 2025 12:36 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த பாக்கம் கிராமத்தில், நெற்களத்தின் மீது நாடக மேடை அமைக்கப்படுவதால், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டது, பாக்கம் ஊராட்சி. இங்குள்ள பாக்கம் காலனி பகுதியில், 50க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், இங்குள்ள மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான பொது இடத்தில் நெற்களம் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தற்போது, இந்த நெற்களத்தின் மீது நாடக மேடை அமைப்பதற்காக, நெற்களத்தை சேதப்படுத்தி பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதனால், அவசிய தேவைக்கு இப்பகுதியினருக்கு நெற்களம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், பகுதிவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மேலும் இதுகுறித்து, பாக்கம் காலனி பகுதிவாசிகள், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் -கிராம ஊராட்சி அலுவலர்களுக்கு புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, கிராமத்தினர் கூறியதாவது:
மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான காலி இடம் இருந்தும், பயன்பாட்டில் இருந்து வரும் இந்த நெற்களத்தின் மீது நாடக மேடை அமைக்க, ஒப்பந்ததாரர் பள்ளம் தோண்டி உள்ளார். இதனால், நெற்களம் இல்லாமல் விவசாயிகள் அறுவடை நேரத்தில் தவிக்க வேண்டியிருக்கும்.
எனவே, மதுராந்தகம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடக மேடையை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

