/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமியை சீண்டிய எஸ்.ஐ., 'போக்சோ' பிரிவில் வழக்கு
/
சிறுமியை சீண்டிய எஸ்.ஐ., 'போக்சோ' பிரிவில் வழக்கு
ADDED : ஜூலை 02, 2025 11:32 AM
சென்னை: சிறுமியை சீண்டியதாக, போலீஸ் எஸ்.ஐ., மீது, 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த, 8 வயது சிறுமிக்கு, ஆயுதப்படையில் மோட்டார் வாகன பிரிவில் பணிபுரியும் எஸ்.ஐ., ராஜூ, 52, மயக்க ஊசி செலுத்தி பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் எழுந்தது.
இச்சம்பவம் தொடர்பாக, எஸ்.ஐ., மற்றும் சிறுமி தரப்பினரிடம் மோதல் ஏற்பட்டது.
'சிறுமியின் தந்தைதான் அவரை அடித்து துன்புறுத்துவார். இதை நாங்கள் வீடியோ எடுத்து, சைல்டு லைன் எண்களுக்கு புகார் அளிக்க இருந்தோம்' என, எஸ்.ஐ., குடும்பத்தினர், நுங்கம்பாக்கம் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை கமிஷனர் வனிதா தலைமையிலான போலீசார், சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர்.
அதன் அடிப்படையில், எஸ்.ஐ., ராஜூ மீது, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியின் குடும்பத்தார் மீது, எஸ்.ஐ., தரப்பினர் அளித்த புகார் மீது, புகார் மனு ஏற்பு ரசீது வழங்கப்பட்டு உள்ளது.