/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சார் - பதிவாளர் அலுவலகம் அருகே தினமும் போக்குவரத்து நெரிசல்
/
சார் - பதிவாளர் அலுவலகம் அருகே தினமும் போக்குவரத்து நெரிசல்
சார் - பதிவாளர் அலுவலகம் அருகே தினமும் போக்குவரத்து நெரிசல்
சார் - பதிவாளர் அலுவலகம் அருகே தினமும் போக்குவரத்து நெரிசல்
ADDED : அக் 25, 2025 02:30 AM

கூடுவாஞ்சேரி: நந்திவரம் -- கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகம் உள்ள சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளன. இதில், 21வது வார்டுக்கு உட்பட்ட டிபன்ஸ் காலனி சாலையில், சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது.
நெல்லிக்குப்பம் சாலையிலிருந்து ஜி.எஸ்.டி., சாலைக்குச் செல்வோர், சார் - பதிவாளர் அலுவலகம் உள்ள டிபன்ஸ் காலனி வழியாக செல்வதால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வருவோர், தங்களது வாகனங்களை, சாலையை ஆக்கிரமித்து நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால், இந்த வழித்தடத்தில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல், நெரிசல் ஏற்படுகிறது.
அவசர கால ஆம்புலன்ஸ் கூட, இந்த இடத்தில் சிக்கி பிரச்னை ஏற்படுகிறது.
எனவே, சார் - பதிவாளர் அலுவலகம் முன், போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவோர் மீது, போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

