/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எஸ்.ஐ.ஆர்., படிவம் அனைத்து கட்சி கூட்டம்
/
எஸ்.ஐ.ஆர்., படிவம் அனைத்து கட்சி கூட்டம்
ADDED : டிச 04, 2025 02:44 AM

செய்யூர்: செய்யூரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் வருவாய் அலுவலர் தலைமையில் நேற்று, அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, தமிழகம் முழுதும் சிறப்பு தீவிர திருத்த பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
செய்யூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 263 ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில், வீடுதோறும் படிவம் வழங்கப்பட்டு, விபரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் வருவாய் அலுவலர் ஸ்ரீதேவி தலைமையில், செய்யூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை 11:00 மணியளவில், அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இதில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் கண்டறியப்பட்ட இறப்பு, இரட்டை பதிவு மற்றும் குடிபெயர்ந்தோர் உள்ளிட்டோர் விபரம் அடங்கிய வாக்காளர் பட்டியல், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதை சரிபார்த்து, திருத்தம் இருந்தால் விரைந்து தெரிவிக்க வேண்டும் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

