/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூர் ஏரி கலங்கல் சேதம் தண்ணீர் சேமிக்க முடியாமல் அவதி
/
சித்தாமூர் ஏரி கலங்கல் சேதம் தண்ணீர் சேமிக்க முடியாமல் அவதி
சித்தாமூர் ஏரி கலங்கல் சேதம் தண்ணீர் சேமிக்க முடியாமல் அவதி
சித்தாமூர் ஏரி கலங்கல் சேதம் தண்ணீர் சேமிக்க முடியாமல் அவதி
ADDED : அக் 21, 2025 11:27 PM

சித்தாமூர்: சித்தாமூர் ஏரி கலங்கல் பகுதி சேதமடைந்து தண்ணீர் சேமிக்க முடியாமல் உள்ளதால் நீர் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
மது ராந்தகம் ஒன்றியம், நெட்ரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தாமூர் கிராமத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது.
இந்த ஏரியின் வாயிலாக, 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு வயல்வெளி நீர்ப்பாசனம் பெறுகிறது. ஏரியின் கலங்கல் பகுதி பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளதால், மழைகாலத்தில் ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.
தொடர்ந்து தண்ணீர் வெளியேறுவதால், ஏரியில் போதிய தண்ணீர் இன்றி, விவசாயம் பாதிக்கப்படுகிறது.
மேலும் கோடை காலத்தில் இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இரண்டாம் போகம் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது.
பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள கலங்கல் பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.