/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சீவாடி சுற்று வட்டார பகுதியில் தொடர் மின் தடையால் அவதி
/
சீவாடி சுற்று வட்டார பகுதியில் தொடர் மின் தடையால் அவதி
சீவாடி சுற்று வட்டார பகுதியில் தொடர் மின் தடையால் அவதி
சீவாடி சுற்று வட்டார பகுதியில் தொடர் மின் தடையால் அவதி
ADDED : செப் 30, 2024 04:52 AM
பவுஞ்சூர் : பவுஞ்சூர் அடுத்த சீவாடி பகுதியில், 110 கி.வோ., திறன் கொண்ட துணை மின் நிலையம், கடந்த நான்கு மாதங்களாக செயல்பட்டு வருகிறது.
சீவாடி சுற்றுவட்டாரப் பகுதிக்கு, ஏற்கனவே மதுராந்தகம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது சீவாடியில் துவங்கப்பட்டுள்ள புதிய துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 20 நாட்களாக, புதிய துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தச்சூர், பேக்கரணை, மாரிபுத்துார், காவதுார், தேவத்துார் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், இரவு நேரத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும், சிறிதாக மழை பெய்தாலும், 5 முதல் 10 மணி நேரம் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்படுவதாகவும், அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால், இரவு நேரத்தில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். துணை மின் நிலையத்திற்கு தொடர்பு கொண்டால், சம்பந்தப்பட்ட மின் ஊழியர்கள் முறையாக பதில் அளிப்பது இல்லை.
இதுகுறித்து, அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, மின் தடை பிரச்னையை சீரமைத்து, தடையின்றி மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

