/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநில குத்துச்சண்டை போட்டி சிவந்தி பள்ளி மாணவன் முதலிடம்
/
மாநில குத்துச்சண்டை போட்டி சிவந்தி பள்ளி மாணவன் முதலிடம்
மாநில குத்துச்சண்டை போட்டி சிவந்தி பள்ளி மாணவன் முதலிடம்
மாநில குத்துச்சண்டை போட்டி சிவந்தி பள்ளி மாணவன் முதலிடம்
ADDED : பிப் 07, 2025 12:25 AM
சென்னை, பிப். 7-
மயிலாடுதுறையில் நடந்த, மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார், சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவன் மு.கமலேஷ், 13, முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இவர், 14 வயதிற்குட்பட்ட, 46 - -48 கிலோ எடை பிரிவில், முதல் சுற்றில் முதலிடம் பெற்று, அடுத்த சுற்றிற்கு தகுதிபெற்றார்.
அடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றிபெற்று, மாநில அளவில் பங்கேற்க தகுதிபெற்றார்.
தொடர்ந்து, மாநில அளவில் மயிலாடுதுறையில் நடந்த போட்டியில், முதல் சுற்றில் செங்கல்பட்டு மாவட்ட வீரரையும், 2வது சுற்றில் கரூர் மாவட்ட வீரரையும் வெற்றிபெற்று, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
காலிறுதியில், சென்னை மாவட்ட வீரரையும், அரையிறுதியில் திருவள்ளூர் மாவட்ட வீரரையும் வென்று, இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றார்.
இறுதிப் போட்டியில், மதுரை மாவட்ட வீரரை வென்று, கமலேஷ் தங்கப்பதக்கம் வென்றார். இதைத் தொடர்ந்து, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

