/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுற்றுலா வழிகாட்டிகளுக்கு திறன் மேம்பாடு பயிற்சி
/
சுற்றுலா வழிகாட்டிகளுக்கு திறன் மேம்பாடு பயிற்சி
சுற்றுலா வழிகாட்டிகளுக்கு திறன் மேம்பாடு பயிற்சி
சுற்றுலா வழிகாட்டிகளுக்கு திறன் மேம்பாடு பயிற்சி
ADDED : ஜன 08, 2026 05:59 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு, திறன் மேம்பாடு மற்றும் நன்னடத்தை பயிற்சி அளிக்கப்பட்டது.
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை, பெரும்பாலானோர் சரித்திர பின்னணி குறித்து அறிய ஆர்வமின்றி, வெறுமனே காண்கின்றனர்.
இதுகுறித்து அறிய விரும்பும் சுற்றுலா பயணியர், சுற்றுலா வழிகாட்டிகளை நாடுகின்றனர்.
எனவே, சுற்றுலா பயணியருடன் நன்னடத்தை நடைமுறைகளை வழிகாட்டிகள் கடை பிடிப்பது குறித்து, தமிழக சுற்றுலாத்துறை நேற்று முன்தினம், திறன் மேம்பாட்டு பயிற்சியை துவக்கியது. மாநில நிபுணர் மதிப்பீட்டு குழு தலைவர் பழனிக்குமார் துவக்கினார்.
இங்குள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதியில் நடந்த இப்பயிற்சியில் வழிகாட்டிகள், வழிகாட்டி அங்கீகாரம் பெற விண்ணப்பித்துள்ளவர்கள் என, 47 பேர் பங்கேற்றனர்.
பயிற்சியில் நேற்று, தொல்லியல் மற்றும் கலாசார முக்கியத்துவ பகுதிகள், ஆன்மிக சிறப்பு கோவில்கள் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.
பயணியரிடம் அணுகுமுறை, இன்முகத்துடன் செயல்படுவது, முறையான கட்டணம் பெறுவது, சிற்பங்கள், பல மொழிகள் அறிந்திருப்பது ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
டிஜிட்டல் ஊடகங்களில் வர்த்தக சந்தை பயன்பாடு குறித்து, இன்று பயிற்சி அளிக்கப்படுகிறது.

