/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி
/
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி
ADDED : அக் 29, 2025 08:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, 'தாட்கோ' சார்பில் ஒப்பனை, அழகு கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இதற்கு விண்ணப்பிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் - 2 வரை படித்தவராக இருக்க வேண்டும்.
18 வயது முதல் 35 வயதிற்குள்ளும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கான கால அளவு 90 நாட்கள். இப்பயிற்சியில் சேருவதற்கு, தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

