ADDED : ஜன 31, 2025 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:செங்கை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பரனுார், புலிப்பாக்கம், சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்தூர், ஆப்பூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக அதிகமான பனிப்பொழிவு பெய்தது.
இதன் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீ பெரும்புந்தூர் நெடுஞ்சாலை, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர்.
மேலும் சாலைகள் மற்றும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு மிதமான வேகத்திலேயே வாகனங்களை இயக்கினர்.
கடந்த ஒரு மாதங்களாக இரவு நேரங்களில் மட்டுமே பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்ட நிலையில்க்ஷ கடந்த இரண்டு நாட்களாக காலை 9:00 மணி வரை தொடர்ந்து பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.