/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எஸ்.என்.யூ., கோப்பை கிரிக்கெட் ஷிவ் நாடார் பல்கலை வெற்றி
/
எஸ்.என்.யூ., கோப்பை கிரிக்கெட் ஷிவ் நாடார் பல்கலை வெற்றி
எஸ்.என்.யூ., கோப்பை கிரிக்கெட் ஷிவ் நாடார் பல்கலை வெற்றி
எஸ்.என்.யூ., கோப்பை கிரிக்கெட் ஷிவ் நாடார் பல்கலை வெற்றி
ADDED : மார் 20, 2024 09:16 PM
சென்னை:சென்னையில் உள்ள ஷிவ் நாடார் பல்கலை சார்பில், எஸ்.என்.யூ., கோப்பைக்கான கிரிகெட் போட்டி, காலவாக்கம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கல்லுாரி வளாகத்தில், நேற்று முன்தினம் துவங்கியது.
இதில், சென்னை உட்பட பல்வேறு பகுதியில் உள்ள 12 கல்லுாரி அணிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் பங்கேற்றுள்ளன. முதல் நாள் போட்டியை, பல்கலை துணை வேந்தர் ஸ்ரீமன் குமார் துவங்கி வைத்தார்.
நேற்று நடந்த ஆட்டத்தில், ஷிவ் நாடார் பல்கலை மற்றும் தாகூர் கல்லுாரி அணிகள் மோதின. இதில், முதலில் பேட் செய்த, ஷிவ் நாடார் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு, 148 ரன்கள் அடித்தது.
அடுத்து பேட் செய்த, தாகூர் கல்லுாரி அணி, 18 ஓவர்களில் 92 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால், 56 ரன்களை வித்தியாசத்தில், ஷிவ் நாடார் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், செட்டிநாடு பல்கலை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் அடித்தது.
அடுத்து பேட் செய்த, ராஜலட்சுமி அணி, 17 ஓவர்களில் மூன்று விக்கெட் மட்டுமே இழந்து, 104 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

