/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குப்பை குவிந்துள்ள வடிகால்வாய் துார்வார சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
/
குப்பை குவிந்துள்ள வடிகால்வாய் துார்வார சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
குப்பை குவிந்துள்ள வடிகால்வாய் துார்வார சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
குப்பை குவிந்துள்ள வடிகால்வாய் துார்வார சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ADDED : ஏப் 08, 2025 12:27 AM

திருப்போரூர்,
திருப்போரூர் ஒன்றியத்தில் தையூர், கேளம்பாக்கம் பகுதி சாலையோர வடிகால்வாயை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் ஒன்றியத்தில், தையூர் ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டியும், தையூர் மற்றும் கேளம்பாக்கத்தில் வீராணம் சாலையை ஒட்டியும் வடிகால்வாய் உள்ளது.
மழைக்காலங்களில் தையூர் ஏரி மற்றும் நிலப்பரப்புகள், கேளம்பாக்கம் சிறு வடிகால்வாய், நிலப்பரப்புகளில் வழிந்தோடும் மழைநீர், மேற்கண்ட வடிகால்வாய் வழியாக செல்கிறது.
இந்நிலையில், இந்த கால்வாயில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளன. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து, காய்வாயே தெரியாத அளவிற்கு உள்ளது.
தற்போது, இந்த வடிகால்வாயில் கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இப்பகுதிவாசிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, கால்வாயில் உள்ள குப்பை மற்றும் கழிவுகளை அகற்றி, வடிகால்வாயை துார்வார வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.