/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வடிகால்வாயில் தேங்கியிருந்த மண் செய்யூர் ஊராட்சியில் அகற்றம்
/
வடிகால்வாயில் தேங்கியிருந்த மண் செய்யூர் ஊராட்சியில் அகற்றம்
வடிகால்வாயில் தேங்கியிருந்த மண் செய்யூர் ஊராட்சியில் அகற்றம்
வடிகால்வாயில் தேங்கியிருந்த மண் செய்யூர் ஊராட்சியில் அகற்றம்
ADDED : நவ 10, 2025 11:08 PM

செய்யூர்: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, செய்யூர் ஊராட்சியில் உள்ள வடிகால்வாய்களில் தேங்கியிருந்த மண் அகற்றப்பட்டது.
லத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள செய்யூர் ஊராட்சியில் வடக்கு செய்யூர், மேற்கு செய்யூர், சால்ட் காலனி, தேவராஜபுரம், பாளையார்மடம், புத்துார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இதில், வடக்கு செய்யூர் பகுதியில், 500க்கு ம் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்காக, சில ஆண்டுகளுக்கு முன் வடிகால்வாய் அமைக்கப்பட்டது. இந்த வடிகால்வாய்களில் மண் துார்ந்து இருந்தது.
குறிப்பாக, வடக்கு செய்யூர் மாரியம்மன் கோவில் தெருவில், வடிகால்வாய் சீரமைக்கப்படாமல், மண் துார்ந்து இருந்தது.
இதனால், அதில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. இரவு நேரத்தில் கொசுத்தொல்லையால் முதியோர் மற்றும் குழந்தைகள் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து நம் நாளிதழில், செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, ஊராட்சி நிர்வாகம் சார்பாக துாய்மைப் பணியாளர்கள், வடிகால்வாய்களில் தேங்கியிருந்த மண்ணை அப்புறப்படுத்தினர்.

