/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாலாஜாபாத் - அவளூர் பாலாறு குறுக்கே உயர்மட்ட பாலத்திற்கு மண் பரிசோதனை
/
வாலாஜாபாத் - அவளூர் பாலாறு குறுக்கே உயர்மட்ட பாலத்திற்கு மண் பரிசோதனை
வாலாஜாபாத் - அவளூர் பாலாறு குறுக்கே உயர்மட்ட பாலத்திற்கு மண் பரிசோதனை
வாலாஜாபாத் - அவளூர் பாலாறு குறுக்கே உயர்மட்ட பாலத்திற்கு மண் பரிசோதனை
ADDED : ஜன 27, 2024 01:08 AM

காஞ்சிபுரம்:பாலாற்றில், 2021ம் ஆண்டில் பெய்த கன மழையால், பாலாற்றில் வினாடிக்கு, 1 லட்சம் கன அடி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
பாலாற்றின் குறுக்கே இருந்த, பெரும்பாக்கம் மற்றும் வாலாஜாபாத் ஆகிய தரைப்பாலங்கள் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், முற்றிலும் துண்டிக்கப்பட்டன.
இதனால், பெரும்பாக்கம் சுற்றியுள்ள மக்கள் மற்றும் அவளூரை சுற்றியுள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
குறிப்பாக, வாலாஜாபாத் - அவளூர் இடையே, பாலாறு தரைப்பாலம், 240 மீட்டர் சேதமடைந்ததால், வாலாஜாபாத் வழியாக, அவளூர், காவாந்தண்டலம், இளையனார்வேலுார் உள்ளிட்ட 30 கிராமங்களை சேர்ந்த மக்கள் பாலாற்று பாலம் வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பாலாற்றின் குறுக்கே, புதிய உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு, 100 கோடி ரூபாய் கேட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நெடுஞ்சாலை துறையினர், அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளனர்.
புதிய உயர்மட்ட பாலத்துக்கு நிதி ஏதும் ஒதுக்கவில்லை. மாறாக, தரைப்பாலத்தை சீரமைக்க 2.6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பாலப்பணி நிறைவு செய்து, கடந்தாண்டு அவசர அவசரமாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
தற்போது, வாலாஜாபாத் - அவளூர் பாலாறு குறுக்கே, மண் பரிசோதனை செய்யும் பணியை நெடுஞ்சாலை துறையினர் துவக்கியுள்ளனர்.
விரைவில், உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவக்கப்படும் என, கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறியதாவது:
வாலாஜாபாத் - அவளூர் பாலாறு இடையே, உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு, மண் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இந்த குழுவினர், மண் பரிசோதனை செய்துவிட்டு, திட்ட அறிக்கை தயாரித்து அரசிற்கு அனுப்புவர்.
அதன்பின், அரசிடம் நிதி ஒதுக்கீடு பெற்ற பின், உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

