ADDED : பிப் 17, 2026 05:51 AM
அ நிறம் | அளவு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மலை பூங்கா பகுதியை சேர்ந்தவர் ரவி மகன் சிவநேசன், 19. இவர் மீது செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை, வழிப்பறி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்நிலையில்,நேற்று முன்தினம் சிவநேசன் வீட்டில் இருந்த போது அவரது தந்தையுடன் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சிவநேசன் இரும்பு கம்பியால் தந்தையை தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தோர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். ரவி அளித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு நகர போலீசார் நேற்று சிவநேசனை கைது செய்தனர்.
