/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செல்வமுத்து குமார சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் விமரிசை
/
செல்வமுத்து குமார சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் விமரிசை
செல்வமுத்து குமார சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் விமரிசை
செல்வமுத்து குமார சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் விமரிசை
ADDED : அக் 27, 2025 11:27 PM

மறைமலை நகர்: மறைமலை நகர் செல்வமுத்து குமார சுவாமி கோவிலில், நேற்று மாலை, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
மறைமலை நகர் நகராட்சி, 'என்.எச் -2' பகுதியில் பழமையான செல்வமுத்து குமார சுவாமி கோவில் உள்ளது.
இங்கு கடந்த 22ம் தேதி, கந்தசஷ்டி பெருவிழா நிகழ்ச்சி துவங்கியது.
தினமும் மூலவர் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளினார். நேற்று முன்தினம், கந்தப்பெருமான் மயில் மேல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று காலை 9:00 மணிக்கு, முத்துகுமாரசாமி ஹோமம், சண்முக அலங்காரம், ஏகதின லட்ச்சார்ச்சனை பூஜைகளை தொடர்ந்து, மாலை 5:30 மணிக்கு, முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்யும், மஹா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமரிமையாக நடந்தது.
இதில் மறைமலை நகர் மற்றும் சுற்று பகுதியில் வசிக்கும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவமும், நாளை காலை 10:00 மணிக்கு திருத்தேர் வீதி உலாவும் நடக்கிறது.

