ADDED : ஜன 01, 2025 08:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆங்கில புத்தாண்டையொட்டி மாமல்லபுரம் சுற்றுலாத்தலத்திற்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு, மாமல்லபுரத்திற்கு பயணியர் வசதிக்காக, விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், நேற்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், ஏராளமான பயணியர் சென்று வந்தனர்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வழக்கம் போல், அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதாக, செங்கல்பட்டு விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.